உள்ளூர் செய்திகள்

குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 598 மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 582 பேரும், மாற்றுத்திறனாளிகள் 16 பேர் என மொத்தம் 598 மனுக்களை கொடுத்தனர். மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார். டி.ஆர்.ஓ., ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !