உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் பகுதியில் குட்கா விற்பனை ஜோர்

சங்கராபுரம் பகுதியில் குட்கா விற்பனை ஜோர்

சங்கராபுரம் : சங்கராபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குட்கா, மற்றும் கஞ்சா சிகரட் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் அவல நிலை நீடிக்கிறது.சங்கராபுரம் பகுதியில் கடந்த கடந்த இரண்டு , மாதங்களுக்கு முன்பு வரை பெட்டிகடை,மளிகை கடைகளில் கள்ளத்தனமாக குட்கா போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தி இவற்றை ஓரளவிற்கு கட்டுபடுத்தினர்.இந்நிலையில் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் களளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் பணியில் கடந்த 2 மாதங்களாக போலீசார் ஓட்டுமொத்தமாக இந்தப் பணியில் ஈடுபட்டுவந்தனர். இதனால் குட்கா ,கஞ்சா விற்பனையை கண்காணிப்பதில் சுனக்கம் ஏற்பட்டது. இதனை ஒரு சில கடைகாரர்களுக்கு சாதகமாக இருக்கவே சங்கராபுரம் சுற்றி உள்ள பல கிராமங்கள் மற்றும் சங்கராபுரம் நகரில் ஒரு சில கடைகளில் ஒரு பாக்கெட் ஹான்ஸ் 40 ருபாய்க்கு விற்கின்றனர்.மேலும் சங்கராபுரம் நகரில் கஞ்சா சிகரட் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.பள்ளி,கல்லுரி மாணவர்கள் அதிக அளவில் இதனை வாங்கி பயன்படுத்தி போதைக்கு அடிமையாகி வருகின்றனர். சுகாதார துறையினரும் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர். சங்கராபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பாக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை