மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
28-Feb-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய இந்து துவக்க பள்ளியில் நுாற்றாண்டு மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தேவராஜன் வரவேற்றார்.ஆவின் சேர்மன் ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் திலகவதி, நகர செயலாளர் துரை, பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை,பேரூராட்சி துணை தலைவர் ஆஷாபீ, இன்னர் வீல் கிளப் தலைவர் சுபாஷினி, ஆமினா அறக்கட்ளை இதயத்துல்லா, வியாபாரிகள் சங்க தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் குசேலன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் வேதநாயகி நன்றி கூறினார்.
28-Feb-2025