உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பேராசிரியரிடம் ரூ.26 லட்சம் மோசடி ஐதராபாத் ஆசாமி சிக்கினார்

பேராசிரியரிடம் ரூ.26 லட்சம் மோசடி ஐதராபாத் ஆசாமி சிக்கினார்

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை பேராசிரியரிடம் ஆன்லைன் செயலி மூலம் ரூ.26 லட்சம் மோசடி செய்த ஐதராபாத் ஆசாமியிடம் இருந்த ரூ.15.54 லட்சத்தை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையைச் சேர்ந்தவர் செபஸ்டின் மகன் வில்லியம் சுரேஷ்குமார்,47; பேராசிரியர். இவர், 6 மாதங்களுக்கு முன் 'கூகுள் - பிளே ஸ்டோரில்' உள்ள இன்ஸ்வெஸ்ட்மெண்ட் செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மர்ம நபர் கூறியதை நம்பி 26 லட்சத்து 18 ஆயிரத்து 949 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பூங்கோதை தலைமையிலான தனிப்படை போலீசார் ஐதராபாத் சென்று, மோசடி கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வில்லியம் சுரேஷ்குமாரிடம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. உடன் அவரிடமிருந்து 15 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வில்லியம் சுரேஷ்குமாரிடம், எஸ்.பி., சமய்சிங் மீனா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி