மேலும் செய்திகள்
அடையாள எண் பெற பதிவு; விவசாயிகளுக்கு அழைப்பு
19-Feb-2025
ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் விவசாயிகளுக்கான அடையாள எண் பதிவு முகாமை, வேளாண்மை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.அரசின் நலத்திட்டங்களை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு தெரியப்படுத்தவும், விவசாயிகளின் விபரங்களை மின்னணு முறையில் சேகரிக்கவும் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் விவரங்களை முழுவதுமாக பெற்று தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் மத்திய, மாநில அரசு திட்டங்களை பெற்று பயனடைய அடையாள அட்டை அவசியம்.இதையொட்டி வேளாண்துறை அதிகாரிகள் அனைத்து கிராமங்களிலும் முகாமிட்டு விவசாயிகளின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதில், கடம்பூர், மரூர், ஏந்தல், அத்தியூர் மற்றும் அரியலுார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முகாமினை வேளாண்மை உதவி இயக்குநர் சியாம்சுந்தர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மை அலுவலர் புஷ்பவள்ளி, துணை அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
19-Feb-2025