உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ. 94.3 லட்சத்திற்கு வர்த்தகம்

அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ. 94.3 லட்சத்திற்கு வர்த்தகம்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் 94.3 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது. விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று கம்பு வரத்து அதிகரித்து காணப்பட்டது. நாட்டு கம்பு 500 மூட்டை, எச்.பி., ரக கம்பு 400 மூட்டை, மக்காச்சோளம் 400 மூட்டை, நெல் 2,000 மூட்டை விற்பனைக்கு வந்தது. மக்காச்சோளம் நேற்று மூட்டை 2,899 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மணிலா சராசரியாக ஒரு மூட்டையின் 7,419, எள் 8, 069 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 275 மெட்ரிக் டன் அளவிற்கான விவசாய விலை பொருட்கள் ஏலத்திற்கு வந்தது. இதன் மூலம் 94.3 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ