உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கீழ்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

கீழ்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

ரிஷிவந்தியம்: கீழ்பாடி அரசு மேல்நிலைபள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் 6 வகுப்பறைகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கட்டடத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வகுப்பறையில் குத்து விளக்கேற்றி, மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, பி.டி.ஓ., க்கள் சந்திரசேகரன், நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜீவரேகா அண்ணாமலை, ஊராட்சி தலைவர்கள் கிருஷ்ணபிரசாத், பழனியம்மாள், ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை