உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி துவக்கி வைப்பு

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி: தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமினை கலெக்டர் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கினார். மாவட்டத்தில், வரும் 30ம் தேதி வரை நடக்கும் முகாமில் அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 2,553 நிலையங்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் எண்ணிகையிலான குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு(20-30 வயது) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. எனவே, மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மற்றும் குடற்புழு நீக்க மாத்திரையின் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் சின்னப்பொண்ணு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, செவிலியர்கள் வளர்மதி, சுதாகர், பூவாள், சுகாதார ஆய்வாளர்கள் அருள்மணி, அரவிந்தன், பிரவீன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை