தினமலர் நாளிதழ்- வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் இணைந்து கல்வெட்டு பயிற்சி வகுப்புகள்
கள்ளக்குறிச்சி:தினமலர் நாளிதழ் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் கல்வெட்டு பயிற்சி வகுப்புகள், கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை அர்த்தநாரீசுவரர் மாடக்கோயில் வளாகத்தில் நடத்தப்படுகிறது.'தினமலர் -நாளிதழ்'விழுப்புரம் தொல்லியல், கல்வெட்டியல் ஆய்வாளர் வீரராகவன், பாறை ஓவியம் மற்றும் நாணயவியல் ஆய்வாளர் சுகவன முருகன், சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவன தொல்லியல் துறை கல்வெட்டு பயிற்றுனர் ஜீவா, செய்யாறு அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் மதுரைவீரன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.பயிற்சி பெறுபவர்களுக்கு நாணயங்கள் கண்காட்சி மற்றும் பாறை ஓவியங்கள் மரபுநடை களப்பயணம் அழைத்து செல்லப்படுவர். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இதன் துவக்க விழா வரும் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எலவனாசூர்கோட்டை அர்த்தநாரீசுவரர் மாடக்கோவிலில் நடக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள் சங்க தலைவர் மணியன் கலியமூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு மைய தலைவர் சிங்கார உதியன், அர்த்தநாரீசுவரர் கோவில் அறங்காவல் ஆனந்தன், பிடாகம் ஊராட்சி தலைவர் நந்தகுமார் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். வரலாற்று ஆய்வாளர் சங்க துணை தலைவர் கோவிந்த் நன்றி கூறுகிறார். பூபதி, வடிவேல், கண்ணன், சீனிவாசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கின்றனர்.