உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பங்காரம் லட்சுமி கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம் 

பங்காரம் லட்சுமி கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம் 

கள்ளக்குறிச்சி: பங்காரம் லட்சுமி கல்லுாரியில் ஆங்கிலத்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பிரவீன்குமார் வரவேற்றார். கல் லுாரி முதல்வர்கள் பழனி யம்மாள், பாஸ்கரன் வாழ்த்தி பேசினார். பேராசிரியர் மகேந்திரன் அறிமுக உரையாற்றினார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அபுல் கலாம் ஆசாத், வேலைவாய்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்துரைத்தார்.துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாணவிகள் ரூபாவதி, சத்தியபாமா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.பேராசிரியர் சுவேதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி