கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளதாக தாளாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:கள்ளக்குறிச்சி அருகே நீலமங்களம் புறவழிச்சாலையில் உள்ள ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதப்படி, ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் நடத்தப்படுகிறது. குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறையில் 20 மாணவ, மாணவிகள் தனித்தனியே அமர்ந்து கற்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அறிவியல், கணினி மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகங்களும், நுாற்றுக்கணக்கான புத்தகங்களுடன் நுாலகமும் உள்ளது. மத்திய, மாநில அரசு நடத்தும் நீட், ஜே.இ.இ., ஜே.ஐ.ஐ.டி., போட்டித் தேர்வுகளுக்கு 6ம் வகுப்பு முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஆங்கில புலமையை மேம்படுத்த ஆண்டுதோறும் 'பிரிட்டிஷ் கவுன்சில் டிரைனிங் பார் இங்கிலீஷ் கம்யூனிகேஷன்' பயிற்சி வகுப்பிலும், பன்முகத்திறனுக்காக சி.பி.எஸ்.இ., மூலம் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளிலும் பங்கேற்கின்றனர்.கல்வியில் மட்டுமின்றி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கவும், தனித்திறனை மேம்படுத்தி கொள்ளவும் சிலம்பம், ஸ்கேட்டிங், வில்வித்தை, கராத்தே, நீச்சல், யோகா, மேற்கத்திய நடனம், இசை வகுப்பு ஆகியவற்றிற்கு திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.கடந்த 2 கல்வியாண்டுகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று பள்ளி சாதனை படைத்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.