| ADDED : மே 10, 2024 09:54 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.83 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 34வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 214 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 375 மாணவர்கள், 9,751 மாணவிகள் என 20 ஆயிரத்து 126 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.அதில், 8,597 மாணவர்கள், 8,879 மாணவிகள் என 17 ஆயிரத்து 476 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 86.83 ஆகும்.மாவட்டத்தில் 27 தனியார் பள்ளிகள், 7 அரசு பள்ளிகள், 1 அரசு நிதியுதவி பெறும் பள்ளி என 35 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.மாநில அளவில் கடந்த ஆண்டு 89.34 சதவீதம் பெற்று 28வது இடத்தில் இருந்தது. தற்போது 2.51 சதவீதம் குறைந்து 86.83 சதவீதம் பெற்று 34வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வழக்கம்போல் மாணவர்களை விட, மாணவிகள் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.