எரிவாயு தகன மேடையில் பராமரிப்பு பணி
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகராட்சி எரிவாயு தகன மேடையில் வரும் மார்ச் 15 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எரியூட்டும் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது.நகராட்சி கமிஷனர் சரவணன் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள நகராட்சி நவீன எரிவாயு தகன மேடையில் கடந்த 20ம் தேதி முதல் பராமரிப்பு பணி துவங்கியுள்ளது. இந்த பணி வரும் மார்ச் 15ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.இதனால் பிரேதங்கள் எரியூட்டம் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே, நகரபகுதி மக்கள், உடல்களை அந்தந்த பகுதி இடுகாட்டில் எரியூட்டலுக்கு ஏற்பாடு செய்து கொண்டு, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.