உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்சோ வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

போக்சோ வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வாலிபர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.உளுந்துார்பேட்டை கோவிந்தராஜபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அண்ணாமலை, 35; இவர் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.அண்ணாமலையின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., ரஜத்சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதன்பேரில் கலெக்டர் பிரசாந்த், குண்டர் சட்டத்தில் அண்ணாமலையை கைது செய்ய உத்தரவிட்டார்.இதனையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள அண்ணாமலையிடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை உளுந்துார்பேட்டை போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி