மேலும் செய்திகள்
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
12-Feb-2025
சங்கராபுரம், ; சங்கராபுரம் அடுத்த சேராப்பட்டில் விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் ஒரு நாள் பயிற்சி நடந்தது.வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். சேராப்பட்டு ஊராட்சி தலைவர் குப்புசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். துணை வேளாண் அலுவலர் முருகேசன் வரவேற்றார்.இதில், அனைத்து பயிர்களுக்குமான விதை நேர்த்தி செய்யும் தொழில் நுட்பம் குறித்து உதவி அலுவலர் துரை விளக்கினார். வெள்ளிமலை வட்டார வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் ராம்குமார், வேளாண் இயந்திரமயமாக்குதல் பற்றி பேசினார்.பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் அருண்குமார், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் வல்லரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் நன்றி கூறினார்.
12-Feb-2025