உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் ரேஷன் கடை திறப்பு

கல்வராயன்மலையில் ரேஷன் கடை திறப்பு

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.கரியாலுார் கிராமத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்ததால், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, கலக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சந்திரன், துணைச் சேர்மன் பாட்சாபீ ஜாஹிர் உசேன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் உதயசூரியன் எம்.எல்.ஏ., கடையை திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் சின்னதம்பி, ஊராட்சி தலைவர் ரத்தினம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ