உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பகலில் வெளியேவர மக்கள் அச்சம்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பகலில் வெளியேவர மக்கள் அச்சம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். கள்ளக்குறிச்சி கடைவீதியில் பொதுமக்களின் நடமாட்டம் எப்போதும் அதிகளவில் காணப்படும். தற்போது வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுவதால் சாலையில் மிக குறைந்த அளவிலான நடமாட்டம் மட்டுமே காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் சிலரும் குடைபிடித்தபடி செல்கின்றனர். மாலையில் வெயிலின் தாக்கும் குறைந்த பின் வெளியே தலைகாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்