உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருடி வரப்பட்ட மினி டெம்போ விரட்டி பிடித்த போலீசார்

திருடி வரப்பட்ட மினி டெம்போ விரட்டி பிடித்த போலீசார்

உளுந்துார்பேட்டை:திருடி வரப்பட்ட மினி டெம்போவை, உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.மதுரை மாவட்டம், மேலுார் அடுத்த மருதுாரை சேர்ந்தவர் ராஜீவ். இவர், நேற்று முன்தினம் வீட்டு அருகே நிறுத்தி வைத்திருந்த தன் மினி டெம்போ காணவில்லை என மேலுார் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து திருச்சி, கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று காலை 7:00 மணியளவில், திருச்சி சாலையில் ரவுண்டானா அருகே வந்த மினி டெம்போவை நிறுத்தினர்.ஆனால், டெம்போவை நிறுத்தாமல் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். போலீசாரும் விடாமல் டெம்போவை விரட்டி சென்று பிடித்தனர்.அப்போது, டெம்போவில் இருந்த ஒருவர் தப்பிய நிலையில், ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில், பெரம்பலுார் அடுத்த பில்லாங்குளம் பகுதியை சேர்ந்த மாதேஷ் மகன் வெங்கடேசன், 27, என்பதும், தப்பியோடிய நபர் ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜாராம், 32, என்பதும் தெரியவந்தது. அதையடுத்து, வெங்கடேசனை மதுரை போலீசாரிடம், உளுந்துார்பேட்டை போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ