உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒழுக்க சுடரொளி விருது மாணவர்களுக்கு வழங்கல்

ஒழுக்க சுடரொளி விருது மாணவர்களுக்கு வழங்கல்

சங்கராபுரம்: எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு ஒழுக்க சுடரொளி விருது வழங்கும் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை முல்லை மணி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் இளையராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர் கள்ளக்குறிச்சி ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன், ஊராட்சி தலைவர் தனக்கோட்டி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி பாக்கியலட்சுமி ஆகியோர் ஓழுக்கத்தின் மேன்மை குறித்து பேசினர்.தொடர்ந்து, பேசி மாணவர்களுக்கு ஒழுக்க சுடரொளி விருதினை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்,ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை