உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது கடத்தல் வாகனங்கள் மார்ச் 11ல் பொது ஏலம்

மது கடத்தல் வாகனங்கள் மார்ச் 11ல் பொது ஏலம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 43 வாகனங்கள், வரும், மார்ச்,11,ம் தேதி ஏலம் விடப்படுகிறது.எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு :கள்ளக்குறிச்சி மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் மார்ச் 11ம் தேதி காலை 10:00 மணிக்கு, 43 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், இரு சக்கர வாகனம் - ரூ.4 ஆயிரம்; நான்கு சக்கர வாகனம் -ரூ.8 ஆயிரம்; என முன் வைப்பு தொகை செலுத்தினால் மட்டுமே, அனுமதிக்கப்படுவர். ஏலம் விடும் வாகனங்களை அன்றைய தினம் காலை 8:00 மணிக்கு பார்வையிடலாம். வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டால், முன்னுரிமை அளிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 90424 17209, 04151 220260 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை