உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரேஷன் அரிசி கடத்தியவர் கைது 3 டன் பறிமுதல்; ஒருவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது 3 டன் பறிமுதல்; ஒருவர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே 3 டன் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்து, 3 டன் அரிசியை பறிமுதல் செய்தனர். சங்கராபுரம் ஆற்றுப்பாலம் அருகே சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த பிக்அப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 3 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், அரிசி கடத்தியவர் சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாகண்ணு மகன் வினோத்குமார், 32; என தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, வேன் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை