உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரண்டாம் ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழா

இரண்டாம் ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழா

கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சி மாவட்ட விஸ்வகர்மா கொல்லு தச்சு கைவினைஞர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இரண்டாம் ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை விஸ்வகர்மா கொல்லு தச்சு கைவினைஞர்கள் நல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டவர்கள், கள்ளக்குறிச்சி கரியப்பா நகரில் இருந்து புறப்பட்டு, ஜே.ஜே .நகர், கச்சிராயபாளையம் சாலை, காந்தி ரோடு, சேலம் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று விஸ்வகர்மா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கொளஞ்சி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா, பொருளாளர் துரை முன்னிலை வகித்தனர். விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் வேலு, சட்ட ஆலோசகர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். சங்க துணை தலைவர் பூமலை, துணை செயலாளர் அருள், சிவா, சங்க ஆலோசகர் பச்சமுத்து, சங்க ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், காப்பாளர் சுந்தரராஜன், பொதுக்குழு தலைவர் வேலாயுதம், அவை தலைவர் தங்கராசு, உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை