தாயை அடித்துக் கொலை செய்த வழக்கில் மகன் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே குடிப்பதற்கு பணம் தராததால் தாயை அடித்து கொலை செய்த வழக்கில் மகனை, போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துாரைச் சேர்ந்தவர் குரு மனைவி கொளஞ்சி, 55; இவர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பன் என்பவரின் பாழடைந்த வீட்டில் கடந்த 28ம் தேதி ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.அவரது மகன் ரமேஷ் போலீசில் புகார் அளிக்காமல் கொளஞ்சியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வி.ஏ.ஓ., முத்துராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, கொளஞ்சியின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து, ரமேஷிடம் தீவிர விசாரணை நடத்தினர்.அதில், தாய் கொளஞ்சியிடம் மது குடிக்க பணம் கேட்டும் தராததால் ஆத்திரமடைந்து அடித்துக் கொலை செய்தததை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து போலீசார், ரமேைஷ நேற்று கைது செய்தனர்.