மேலும் செய்திகள்
முன்னாள் படை வீரர் குறைகேட்பு கூட்டம்
17-Aug-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் கோரி முன்னாள் படை வீரர்கள் மற்றும் அரவது குடும்பத்தினர் அளித்த 10 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தகுதியின் அடிப்படையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பின்னர் முன்னாள் படை வீரர் நல நிதியிலிருந்து ஈமச்சடங்கு நிதியுதவியாக 2 பேருக்கு தலா 7 ஆயிரம் ரூபாய், 2 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் ஆயிஷாபேகம் மற்றும் முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படைவீரர் குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Aug-2024