உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஸ்கூட்டி மீது கரும்பு டிராக்டர் மோதல்; கணவன் கண் எதிரே மனைவி, மகன் பலி

ஸ்கூட்டி மீது கரும்பு டிராக்டர் மோதல்; கணவன் கண் எதிரே மனைவி, மகன் பலி

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அடுத்த மாதவச்சேரியை சேர்ந்தவர் கண்ணன்,42; விவசாயி. இவர், நேற்று காலை தனது மனைவி சுபா,35; மகன் கவுதம்,7; ஆகியோருடன், ஹீரோ பிளசர் ஸ்கூட்டியில் சித்தலுார் அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார்.மதியம் 12:25 மணியளவில், கள்ளக்குறிச்சி காந்தி ரோடு தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது, பின்னால் வந்த கரும்பு டிராக்டர், கண்ணன் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டி மீது மோதியது. இதில், மூவரும் கீழே விழுந்தனர். அப்போது சுபா மற்றும் அவரது மகன் கவுதம் ஆகியோர் மீது டிராக்டர் டிரெய்லர் சக்கரம் ஏறியதில், இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கண்ணன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மனைவி மற்றும் மகன் தலை நசுங்கி உயிரிழந்ததை பார்த்த கண்ணன் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, இறந்த சுபா, கவுதம் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த கண்ணன் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ