உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தாசில்தார்கள் பொறுப்பேற்பு

தாசில்தார்கள் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் வாணாபுரம் தாசில்தார்கள் பொறுப்பேற்று கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த் துறையில் தாசில்தார் அலகில் பணிபுரியும் 11 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, சின்னசேலத்தில் தாசில்தாராக பணிபுரிந்த கமலக்கண்ணன் கள்ளக்குறிச்சி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பொறுப்பேற்று கொண்டார்.அதேபோல், கள்ளக்குறிச்சி ஆலய நிலங்கள் தனி தாசில்தாராக பணிபுரிந்த மனோஜ் முனியன் சின்னசேலம் தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சியில் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராக பணிபுரிந்த பாலகுரு வாணாபுரம் தாசில்தாராகவும் நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி