உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டிராக்டர் மோதி வாலிபர்  பலி 

டிராக்டர் மோதி வாலிபர்  பலி 

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத்தில் டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் பிரசாந்த, 25; இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தனது தாய் சித்ரா, 52; என்பவருடன் பைக்கில் சென்றார். கச்சிராயபாளையம் ஐ.ஓ.பி., பேங்க் அருகே சென்ற போது எதிரே ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த டிராவல்ஸ் வேன் பிரசாந்த் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பிரசாந்த, சித்ரா ஆகியோர் கீழே விழுந்துள்ளனர். அப்போது பின்னால் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் பிரசாந்த் மீது ஏறி இறங்கியது. இதில் சித்ராவின் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமமனையில் சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து வவிசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ