மூதாட்டியிடம் செயின் பறிப்பு
கள்ளக்குறிச்சி: அம்மையகரத்தில் மூதாட்டி கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி ஜோதி,65; இவர் கடந்த 9ம் தேதி மாலை 7 மணியளவில் வீட்டிற்கு வெளியே நின்று தலை துவட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 27 வயது வாலிபர் ஜோதி் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்க தாலி செயினை பறித்து தப்பியுள்ளார்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.