மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
04-Nov-2025
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
04-Nov-2025
வாகனம் மோதி மூதாட்டி பலி
04-Nov-2025
அக்ராயபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
04-Nov-2025
கள்ளக்குறிச்சி,: லோக்சபா தேர்தலையொட்டி மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள தி.மு.க., தலைமை சர்வே பணி மேற்கொண்டுள்ளது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களில் பயன்பெறும் படிவம் என்று அச்சிடப்பட்ட ஓ.எம்.ஆர்., வடிவ விண்ணப்பம் பாக முகவர்களுக்கு வழங்கப்பட்டது. கிராமங்களில் திண்ணை பிரசாரம் செய்து, கணிசமான ஓட்டுக்களை பெறுவதற்காக, தி.மு.க.,வில் பூத்துக்கு ஒரு பாக முகவரும், 100 ஓட்டுக்கு ஒரு பாக உறுப்பினரும் நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தி.மு.க., தலைமை சர்வே பணியை மேற்கொண்டுள்ளது. அதாவது, பாக முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து, படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு உரிய பதிலை பெற்று நிரப்ப அறிவுறுத்தியது.படிவத்தில், மாவட்டம், தொகுதி, குடும்ப தலைவர் பெயர், தொடர்பு எண், முகவரி, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வசிக்கின்றனரா, குடும்ப அட்டை எண், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் விபரம், கட்சி சார்ந்தவரா, சொந்தமாக வீடு, நிலம் உள்ளதா, தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயனடைந்துள்ளனரா, ஏதேனும் நலத்திட்டம் தேவையா, வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றுள்ளன.பாக முகவர்கள் மற்றும் பாக உறுப்பினர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து, தங்களது ஒன்றிய செயலாளர்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.இந்த சர்வே மூலம், தி.மு.க., ஆட்சி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் மக்களிடத்தில் சென்றடைந்துள்ளதா, அதனால் பயனடைந்துள்ளனரா, எந்த திட்டத்தில் பயனடைய மக்கள் விரும்புகிறார்கள் என்பது குறித்தும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறித்தும் தி.மு.க., கட்சி தலைமை அலசி ஆராய்ந்துள்ளது.
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025