உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்சாரம் தாக்கி வியாபாரி பலி

மின்சாரம் தாக்கி வியாபாரி பலி

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி வளையல் வியாபாரி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 56; தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை க.மாமனந்தலில் நடந்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அப்பகுதியில் வியாபாரம் செய்தார்.இரவு மழை பெய்ததால் ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு அருகே தங்கினார். நேற்று காலை 6:00 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டு வண்டியை தள்ள முயன்ற போது, சாலையோரமாக போடப்பட்டிருந்த தோரணை விளக்கு கம்பத்தை ராதாகிருஷ்ணன் பிடித்தார். அப்போது, கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ராதாகிருஷ்ணன் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில், கள்ளக் குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி