உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மரக்கன்று நடும் நிகழ்ச்சி

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி,; சிறுவங்கூர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சரக துணைப்பதிவாளர் சுகந்த லதா, கூட்டுறவு சார்பதிவாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் பூமாலை வரவேற்றார். மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தென்னை, மா, உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார். இதில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி