உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண் தீ குளிக்க முயற்சி

சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண் தீ குளிக்க முயற்சி

உளுந்துார்பேட்டை,: உளுந்துார்பேட்டை சார்பதிவளர் அலுவலம் முன் தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உளுந்துார்பேட்டை அடுத்த ஆரியநத்தத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி அஞ்சாலாட்சி, 48; இவருக்கு சொந்தமான 6 சென்ட் வீட்டு மனை, அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி காத்தாயி,44; என்பவர் பெயரில், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனால், ஆவேசமடைந்த அஞ்சாலாட்சி; மகன் அருண்பாண்டியன் 27; உறவினர் பழனியம்மாள் 43; ஆகியோர் நேற்று உளுந்துார்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று, சார் பதிவாளர் தாமோதரனிடம், 'எப்படி எங்கள் இடத்தை வேறு ஒருவருக்கு பத்திர பதிவு செய்யலாம்'எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் மூவரும், அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அஞ்சலாட்சி தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயன்றார். உடன், அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர்.இச்சம்பவத்தால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை