| ADDED : மே 06, 2024 03:42 AM
கள்ளக்குறிச்சி, : ஏமப்பேர் மின் மயானம் அருகே கூலித் தொழிலாளி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் நகராட்சி மின் மயானம் அருகே அடையாளம் தெரியாத நபர் துாக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்தது குறித்து கள்ளக்குறிச்சி போலீசுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில், ஏமப்பேர் ஜே.ஜே., நகரைச் சேர்ந்த முருகன், 43; என்பதும், கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதும், குடும்ப பிரச்னையால் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியேறியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.