உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி

பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி

கள்ளக்குறிச்சி: நாகலுாரில் கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த கண்டாச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ், 27; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 'யமாகா எப்.இசட்' பைக்கில் விருகாவூரில் இருந்து கண்டாச்சி மங்கலத்திற்கு சென்றார். நாகலுார் அருகே சென்ற போது எதிரில் வந்த மாருதி ஸ்விப்ட் கார், வேல்ராஜ் மீது மோதியது.விபத்தில் படுகாயமடைந்த வேல்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை