உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மரம் விழுந்து தொழிலாளி பலி

மரம் விழுந்து தொழிலாளி பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மரம் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த வடமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீதாராமன், 42; கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை 11:00 மணியளவில் நத்தமூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தை தங்க பாண்டியன் என்பவருடன் சேர்ந்து வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது, வெட்டிய மரம் சீதாராமன் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ