உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் திருடிய  வாலிபர் கைது

பைக் திருடிய  வாலிபர் கைது

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பகுதியில் பைக்குகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக்குகள் திருடுபோகின. கச்சிராயபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில் கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த முருகனை 33, பிடித்து விசாரித்தனர். இதில் முருகன் 6 பைக்குகளை திருடி சென்றது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்து 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை