உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

திருக்கோவிலுாரில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சியில், கமிஷனர் தலைமையில் நடந்த சோதனையில் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருக்கோவிலுார் நகராட்சி கமிஷனர் திவ்யா தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் கடைவீதி, சன்னதி வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 10 கடைகள் கண்டறியப்பட்டது. உடன் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு கடைக்கும் தலா 1000 ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை