மேலும் செய்திகள்
ஸ்கூட்டர் கேட்டு 125 விண்ணப்பம்
05-Sep-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், 105 மாற்றுத் திறனாளிகளுக்கு 8.57 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மலையரசன் எம்.பி., மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், எல்போ ஊன்றுகோல், ரோலேட்டர், சிறப்பு சக்கர நாற்காலி, பிரய்லி கேன், காதொலி கருவி உள்ளிட்ட 8.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவி உபகரணங்கள் 105 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன், இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழக நிறுவனத்தினர், மாற்றுத் திறனாளிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
05-Sep-2024