உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 10,ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் கள்ளக்குறிச்சி 37வது இடம்  பிளஸ்1,ல் 29 வது இடம் 

10,ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் கள்ளக்குறிச்சி 37வது இடம்  பிளஸ்1,ல் 29 வது இடம் 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசு பொதுத்தேர்வு முடிவுகளில், 10,ம் வகுப்பில், 37வது இடத்தையும், பிளஸ் 1 வகுப்பில், 29,வது இடத்தையும் பிடித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 227 பள்ளிகளை சேர்ந்த, 19 ஆயிரத்து 474 மாணவ மாணவியர் எழுதினர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், 16 ஆயிரத்து 925 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். அதாவது, தேர்ச்சி, 86.91 சதவீதம் ஆகும்.இதன் மூலம், மாநிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், 37 வது இடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டை விட 0.08 சதவீதம் கூடுதலான தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்டத்தில் கருந்தலாக்குறிச்சி, கல்லாநத்தம், ஊராங்கனி, அத்தியந்தல், தகடி, பானையங்கல், வடதொரசலுார் உள்ளிட்ட, 12 அரசு பள்ளிகள், 30 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநிலத்தில் கடந்தாண்டு 34வது இடத்தில் இருந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்தாண்டு, 37,வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல, பிளஸ் 1 வகுப்பை பொருத்தவரை,123 பள்ளிகளில் 17 ஆயிரத்து 191 மாணவ, மாணவியர்தேர்வு எழுதினர். இதில், 15 ஆயிரத்து 471 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.99 ஆகும். இந்த தேர்வில், மாநிலத்தில் 29 இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்டம் பிடித்துள்ளது. கடந்தாண்டில், 36,வது இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்தாண்டை விட, தற்போது 3.99 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி அதிகரித்துள்ளது. மேலும் 8 அரசு பள்ளிகள், 16 தனியார் பள்ளிகள் என மொத்தம் 24 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை