உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கழிவு நீர் கால்வாய் சீரமைக்க ரூ.16 கோடியில் திட்டம்

கழிவு நீர் கால்வாய் சீரமைக்க ரூ.16 கோடியில் திட்டம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகர மன்ற கூட்டம், புதிய நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.நகரமன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி வரவேற்றார்.கவுன்சிலர்கள் பங்கேற்று, கழிவு நீர் கால்வாய், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட தங்கள் வார்டு அடிப்படைத் தேவைகள் குறித்து பேசினர்.இதற்கு பதிலளித்த நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நகரில் பழுதடைந்த கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு குறித்து விரிவான திட்ட அறிக்கை 16 கோடி ரூபாய் மதிப்பில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை பல்வேறு திட்டங்களின் கீழ் ஒவ்வொன்றாக நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.தொடர்ந்து புதியதாக கட்டப்பட்டிருக்கும் நவீன எரிவாயு தகன மேடைக்கு 9.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜெனரேட்டர் வாங்குவது. ஏரிக்கரை மூலையில் சிறுநீர் கழிப்பறை அமைப்பது. நகராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்குவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை