உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 19,436 பேர் பங்கேற்பு : 553 பேர் ஆப்சென்ட்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 19,436 பேர் பங்கேற்பு : 553 பேர் ஆப்சென்ட்

கள்ளக்குறிச்சி,: மாவட்டத்தில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 19,463 மாணவ, மாணவியர் எழுதினர். 553 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.மாவட்டத்தில் 214 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10,221 மாணவர்கள், 9,795 மாணவியர் என மொத்தம் 20,016 பேர் 10ம் வகுப்பு பயின்றனர். இந்த மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு 90 மையங்களில் நேற்று துவங்கியது. மேலும், தனித்தேர்வர்கள் 585 பேர் விண்ணப்பித்திருந்தனர்.நேற்று காலை 10:00 மணியளவில் தேர்வு தொடங்கியது. இதில், 9,867 மாணவர்கள், 9,596 மாணவிகள் என மொத்தமாக 19,463 பேர் தேர்வில் பங்கேற்றனர். 354 மாணவர்கள், 199 மாணவியர் என 553 பேர் தேர்வெழுதவில்லை. தனித்தேர்வர்களில் 367 ஆண்கள், 151 பெண்கள் என 518 பேர் தேர்வில் பங்கேற்றனர். 50 ஆண்கள், 17 பெண்கள் என 67 பேர் தேர்வெழுதவில்லை.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொதுத்தேர்வை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சி.இ.ஓ., கார்த்திகா உடனிருந்தார். தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என 2,800 அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை