உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாலிபர் தாக்கு 2 பேர் கைது

வாலிபர் தாக்கு 2 பேர் கைது

விழுப்புரம், ; விழுப்புரத்தில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் காலனி செந்தில்குமார் மகன் பிரதிப்குமார், 22; இவர், நேற்று முன்தினம் பைக்கில் சென்ற போது, மாதாகோவில் பஸ் நிறுத்தம் அருகே, மருதுார்மேடு அர்ஜூனன், 24; சரவணன், 20; ஊரல்கரைமேடு விக்கி, 22; ஆகியோர் வந்த பைக் பிரதிப்குமார் பைக் மீது மோதியது. இதனை தட்டிக்கேட்ட பிரதிப்குமாரை மூவரும் தாக்கினர். விழுப்புரம் டவுன் போலீசார், அர்ஜூனன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து அர்ஜூனன், சரவணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ