உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரங்கநாதபுரத்தை சேர்ந்த நடேசன் மகன் ரங்கநாதன்,42; என்பவர் தனது விளைநிலத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதேபோல், வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார், எஸ்.ஒகையூர் கிராமத்தில் மதுபாட்டில்களை விற்ற, அதே பகுதியை சேர்ந்த, பொன்னுசாமி மகன் மகேந்திரன்,28; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த, 3 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை