மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
03-May-2025
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் காசி,48; என்பவர் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.அவரை கைது செய்து, அவரிடமிருந்த 15 மதுபாட்டில்கள் மற்றும் 200 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல மற்றொரு பகுதியில் மதுபாட்டில் விற்ற அய்யாக்கண்ணு மகன் காந்தி,45; என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்த, 15 மதுபாட்டில்கள் மற்றும் 200 ரூபாய் கைப்பற்றப்பட்டது.
03-May-2025