உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்ற பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த ஆரூர் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த, பாண்டியன் மகன் சத்யராஜ், 30; கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதேபோல சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தபோது மது பாட்டில் விற்ற காந்தி மனைவி மாணிக்கம், 59; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ