உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம் : சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில், புகையிலை பொருட்கள் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோபாலகிருஷ்ணன்,33; என்பவர் பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல, மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பேட்டை, மளிகை கடையில், புகையிலை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.கடை உரிமையாளர் நியாஸ் கான், 48; என்பவரை வடபொன்பரப்பி போலீசார் கைது செய்தனர். மேலும், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை