உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்ற பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் மற்றும் நீலமங்கலம் காத்தி நகர் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அதில் தென்கீரனுார் தடிகாரன் மனைவி கொளஞ்சி, 50; நீலமங்கலம், காந்தி நகர் கார்த்திகேயன், 45; ஆகியோர் தங்களது வீட்டின் அருகே மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை