மேலும் செய்திகள்
அனுமதியின்றி ஜல்லிக்கல் கடத்திய லாரி பறிமுதல்
06-Sep-2026
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த நைனாகுப்பம் அருகே கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தது. அதன் பேரில் மாவட்ட சுரங்கத்துறை உதவி பொறியாளர் மற்றும் புவியியல் அலுவலர் ரகுநாத்குமார், 31; நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த 2 லாரிகளை நிறுத்தினர். லாரியை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பியோடி தலைமறைவாயினர். லாரியை சோதனை செய்ததில், கூழாங்கற்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. அதன் பேரில் 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.
06-Sep-2026