உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.கொளத்துார் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடன் அவர்களிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அதே பகுதியைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் அணில், 25; பலராமன் மகன் மாரிமுத்து, 21; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை