உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

தியாகதுருகம் : கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், தியாகை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அங்குள்ள ஏரிக்கரை அருகே போலீசாரை கண்டு தப்பியோடிய மூன்று பேரை பிடித்து, விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த அஞ்சாபுலி மகன் பிரபு, 26; புதுமாம்பட்டு கோவிந்தன் மகன் தமிழ்ச்செல்வன், 26; சிறுவங்கூர் பச்சமுத்து மகன் பூபதி, 25; என்பதும், 600 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.உடன், போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ